சென்ற இதழ் தொடர்ச்சி...

1

சித்தர்தாசன் சுந்தர்ஜி, ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ராமாவதாரத்திற்கு அடுத்த அவதாரங் களாக பலராமர் அவதாரமும், கிருஷ்ணா வதாரமும் துவாபரயுகத்தில் நடந்ததாகப் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. கிருஷ்ணாவதாரத்தை மோட்ச நிலை அவதா ரமென ஆசான் அகத்தியர் கூறுகிறார். இதற்கு முன் எடுத்த அவதாரங்களில் தன் செயல் களால் உண்டாக்கிக்கொண்ட பாவ- சாபங் களை நிவர்த்திசெய்து முடிக்கவும், முன் அவதா ரங்களில் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றிக்கடனைத் தீர்க்கவும் மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்துப் பிறந்தார் என புராணம் கூறுகிறது.

Advertisment

கிருஷ்ணாவதாரத்தில், தனது முன் அவதா ரங்களில் உண்டான பாவ- சாப- புண்ணியக் கணக்கினை கிருஷ்ணர் எப்படி நிவர்த்தி செய்தார் என்று அகத்தியர் கூறுவதை அறிவோம்.

மச்சாவதாரம் முதல் ராமாவதாரம் வரை எடுத்த பிறவிகளில் ஏதாவதொரு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பார். பிறரைக் காப்பாற்ற யாராவது ஒருவரைக் கொல்லுவார். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் புல்லாங் குழலைத் தவிர வேறு எதனையும் கையில் வைத்துக்கொண்டதில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. பிறர் தன்னை அவமான மாகப் பேசும்போதும், மனம் கோபம் கொள்ளும்படியான நிகழ்வுகள் உண்டாகும் போதும் தன் மனஉணர்ச்சி, வேகங்களை அடக்கிக்கொள்ள அமைதியாக இருக்க இந்த புல்லாங்குழலே அவருக்கு ஆதாரம். தன் மனம் வேகப்படும்போது குழல் ஊதி, இசையால் தன் மனதை அமைதிப்படுத்திக் கொள்வார்.

parathaman

Advertisment

கிருஷ்ணாவதாரத்தில் தன் மனம், வாக்கு, காயத்தைக் கட்டுப்படுத்தி, பாவ- சாபத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் அவ்வாறு இருந்தார். கிருஷ்ணர் தன் நேரடி எதிரிகளான கம்சன், சிசுபாலன் போன்றவர்களை மட்டும்தான் கொன்றாரே தவிர, பிறரைக் காப்பாற்ற யாரையும் கொல்ல வில்லை. தன்னிடம் அடைக்கலம் என வந்தவர் களுக்கு தன் அறிவால் செயல்பட்டும், வழிகாட் டியும் அவர்கள் துன்பத்தைத் தீர்த்தார்.

கிருஷ்ணர் தன் முன் அவதார பாவ- சாப வினைகளால், தன்னைப்பெற்ற தாய்- தந்தை யைப் பிரிந்து, யசோதையின் மகனாக வளர்ந் தார். அரச குடும்பத்தில் பிறந்து, யாதவ இடையர் குலத்தில் வளர்ந்தார். பரசுராம அவ தாரத்தில் ஒரு பாமரப்பெண்ணைக் கொன்றதால், கிருஷ்ணாவதாரத்தில் ஒரு பாமரப் பெண்ணின் மகனாக வாழ்ந்து, அவளுக்கு தாய் என்ற அந்தஸ்தைத் தந்து, பாமரப்பெண்ணைக் கொன்ற பாவத்தை நிவர்த்தி செய்தார்.

இடையர்குல மக்களையே தன் உறவாக, நண்பர்களாக ஏற்றுக்கொண்டு தானும் ஒரு இடையன்தான் என அவர்களுடன் வாழ்ந்தார். ராமாவதாரத்தில் வானரங்கள் செய்த உதவியை நிவர்த்தி செய்யவே, மாடுகளை மேய்த்துக்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்து அவர்களைப் பாதுகாத்தார். மேலும் இந்த செயல் மூலம் மனுதர்மம் கூறும் ஜாதி, மதம், இனம் என்ற நிலை மனிதர்களில் கிடையாது; அனைத்து ஆன்மாக்களும் ஒரே நிலைதான் என்ற உண்மையை கிருஷ்ணர் உணர்த்தினார். எனவே ஜாதி, மதம், இன பேதம் பேசுபவர்களுக்கும், மனிதர்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்பவர்களுக்கும் கிருஷ்ணரின் அருளும் அனுக்கிரகமும் கிடைக்காது என்பது அகத்தியர் வாக்கு.

ராமாவதாரத்தில் 14 ஆண்டுகள் வனவாசத்தில், தன்னுடன் இருந்து சிரமப்பட்ட லட்சுமணன் செய்த உதவியை நிவர்த்தி செய்ய, கிருஷ்ணாவதாரத்தில், தனக்கு நிகராக "பலராமன்' என்ற ஒரு அவதார நிலையைத் தந்து, தனக்கு அண்ணனாகப் பிறக்கச் செய்து, துவாரகை மன்னராக்கி, அவருக்குத் தம்பியாக இருந்து, அவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தொண்டு செய்து தன் நன்றிக்கடனை நிவர்த்தி செய்தார்.

ராமாவதாரத்தில், இந்திரனின் அம்சமா கப் பிறந்த வானர மன்னன் வாலியை மறைந்து நின்று கொன்று, சூரியனின் அம்சமான அவன் தம்பி சுக்ரீவனை வானர மன்னனாக் கினார். உண்மையில் வாலிக்கும் ராமருக்கும் எந்த பகையும் கிடையாது. வாலியைக் கொன்ற தால் உண்டான பாவத்தை, கிருஷ்ணாவ தாரத்தில் இந்திரனின் அம்சாகப் பிறந்த அர்ச்சுனனுக்கு வழிகாட்டியாக இருந்து, அர்ச்சுனனுக்கு ரதசாரதியாகி தேரோட்டி, அர்ச்சுனனின் அண்ணனும், சூரிய குமாரனு மாகிய கர்ணனைக் கொன்று, பாண்டவர் களை பாரதப்போரில் வெற்றி பெறச்செய்து, வாலியைக் கொன்று சுக்ரீவனை மன்னனாக் கிய பாவத்தை நிவர்த்தி செய்தார்.

ராமாவதாரத்தில் தாய்- தந்தை, உறவுகள், இனத்தார் என அனைவரின் ஆதரவையும் இழந்த நிலையில், எந்தப் பிரதிபலனும் பாராமல் தனக்கு உறவாக, நட்பாக, பணி யாளாக இருந்து, இடர்வந்த போதெல்லாம் அந்த துயரங்களை நீக்கி, ராமர் இழந்த அனைத்தையும் திரும்பக் கிடைக்க உதவி செய்த அனுமனை, கிருஷ்ணாவதாரத்தில் தன் தலைமேல் வைத்துக்கொண்டாடி மகிழ்ந் தார். தான் சாரதியாக இருந்து அர்ச்சுனனுக்கு ஓட்டிய தேரில் அனுமன் கொடியை தன் தலைக்குமேல் உயர்ந்த இடத்தில் பறக்கவிட்டு அனுமனுக்கு நன்றிக்கடனைத் தீர்த்தார்.

இராமாவதாரத்தில் வாலியை மறைந் திருந்து கொன்றதால், கிருஷ்ணர் காட்டில் படுத்துறங்கும்போது, அவரின் கால் கட்டை விரல்கள் உயரமாக தெரிந்ததைப் பார்த்த ஒரு வேடன், அவை மானின் காதுகள் என தவறாக நினைத்து எய்த அம்பால் உயிர்துறந் தார். வாலிக்கு தான் செய்ததைத் தானே அனுபவித்துத் தீர்த்தார். இந்த நிகழ்வு மூலம் எவன் ஒருவன் பிறருக்கு எந்த முறையில் தீமை செய்கிறானோ, அதனையே அவன் அடுத்தடுத்தப் பிறவிகளில் திரும்ப அடை வான் என்பதே கிருஷ்ணரின் மரணம் நமக் குணர்த்தும் மாறாத உண்மையாகும். புண்ணியக் கணக்கும் அவ்வாறே.

ராமாவதாரத்தில் ராமனுக்கு லவன், குசன் என இரண்டு மகன்கள் இருந்ததால், அவர்களின் விந்து சுழற்சி மூலம், மகா விஷ்ணு இந்த பூமியில் மறுபடியும் கிருஷ்ணா வதாரம் எடுத்து நிவர்த்திசெய்து முடிக்க பிறக்க நேர்ந்தது. ஆனால் கிருஷ்ணரின் மறைவுக்கு முன்பே அவரின் மனைவி, மகன் கள், குடும்பத்தார் என அனைவரும் மரண மடைந்தனர். கிருஷ்ணர் மட்டுமே கடைசியாக மறைந்தார். இதனால் இவரின் விந்து, ரத்தம் என எதுவும் இல்லாமல் போனது. கிருஷ்ணர் மறுபடியும் இந்த பூமியில் அவதாரம் எடுக்கும் வழி அடைக்கப்பட்டு, இனி பிறவியில்லா மோட்ச நிலையை அடைந்தார்.

கிருஷ்ணர் தன் முந்தைய பிறவிகளில் உண்டான பாவ- சாபங்களுக்கு சரியான நிவர்த் திகளையும், முற்பிறவியில் தனக்கு உதவி செய்தவர்களுக்கு பட்ட நன்றிக்கடனையும், பரிகாரம், யாகம், தானம், தவம் என தீர்க்க வில்லை. தன் வாழ்வின் நடைமுறை செயல் மூலமே அவரவர்க்குரியதைச் செலுத்தி நிவர்த்தி செய்தார் என்பதை கிருஷ்ணா வதாரம் நம்மைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

ராமரின் வாழ்க்கை பற்றிய கதை, ஒருவர் செய்த பாவ- சாபங்களால் அவர் வாழ்க்கை யில் அனுபவிக்கும் சிரமங்களை அறியச் செய்கிறது. கிருஷ்ணரின் வாழ்க்கை நிலை, ஒருவர் செய்த பாவ- சாபங்களை எப்படி நிவர்த்தி செய்து தீர்க்கவேண்டும் என்ற வழிமுறைகளைப் புரிந்து வாழச்சொல்கிறது. தன் முந்தைய அவதாரங்களில் ஆயுதங்களால் செய்த பாவங்களை கிருஷ்ணர் தன் அறிவால் செயல்பட்டு நிவர்த்தி செய்தார்.

ராமாயணமும் மகாபாரதமும் கதையு மல்ல; பட்டிமன்றத்தில் பேசும் பொழுது போக்கு பேச்சுமல்ல. மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது என கருத்துக்களைக்கூறி, மக்கள் நல்வாழ்வை அடைய வழிகாட்டும் பொக்கிஷங்கள். இவை இரண்டும் ஒரு நாட்டிற்கோ, ஒரு சாதி, இனம், மதத்தினருக்கோ உரியதல்ல. இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் வாழ்வில் உண்டான முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளை நிவர்த்தி செய்து இனி பிறவி யில்லா மோட்ச நிலையை அடைய வழிகாட்டும் அறிவுக் களஞ்சியங்கள்.

ஒவ்வொருவரும் தன்னையே கிருஷ்ணராக எண்ணி, தங்கள் பாவ- சாபங்களை அறிந்து, நடைமுறை வாழ்வில் சரியான நிவர்த்தி முறை களைச் செய்து உயர்வாழ்வை அடைவோம்.

செல்: 99441 13267